logo

Get Latest Updates

Stay updated with our instant notification.

logo
logo
account_circle Login
 கேளுங்கள்.... சொல்லப்படும்!
 கேளுங்கள்.... சொல்லப்படும்!

கேளுங்கள்.... சொல்லப்படும்!

By: Prompt Publication
50.00

Single Issue

50.00

Single Issue

  • கட்டுமானத்துறை தொடர்பான பொதுவான ஐயங்கள், தொழிற்நுட்பம், பொருட்கள் குறித்த கேள்விகள் பதில்கள்
  • Price : 50.00
  • Prompt Publication
  • Language - Tamil

About கேளுங்கள்.... சொல்லப்படும்!

இரும்புக்கம்பிகளில் எது சிக்கனமானது? எது தரமானது? நல்ல காண்ட்ராக்டரை கண்றிவது எப்படி? நீரோட்டத்தை கண்டறிந்து கிணறு வெட்டுவது எப்படி? குறைந்த செலவில் கண்கவர் தரைகள் அமைக்க முடியுமா? பெயிண்ட் வாடை வராமல் தடுப்பது எப்படி? மண்பரிசோதனை ஏன் அவசியம்? என்று பலப்பல கேள்விகள் நம்மிடையே பலருக்கும் உண்டு. தொழிற்நுட்பம் மட்டும் அல்ல, கட்டுமானத்துறை தொடர்பான நிறைய பொது ஐயங்களும் நம்மிடையே உள்ளன. இவற்றையெல்லாம் யாரிடம் கேட்பது? யாரிடம் கேட்டால் விடை கிடைக்கும்? என்கிற எதிர்பார்ப்பை இப்புத்தகம் நிச்சயம் பூர்த்தி செய்யும். தமிழன் முதன்மை கட்டுமான மாதஇதழான பில்டர்ஸ்லைனில், ஏராளமான வாசகர்கள் கேட்கும் பல்வேறு வினாக்களுக்கு அந்தந்த துறை நிபுணர்கள் ஒவ்வொரு மாதமும் பதிலளித்து வருகிறார்கள். அவற்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளையும், பதில்களையும் தொகுத்து தனிப்புத்தகமாக வெளியிட்டிருக்கிறோம். பொதுவான ஐயங்கள் ஆகிய உங்களது அனைத்து கேள்விகளுக்கும் நிச்சயம் விடை சொல்லும் என்கிற நம்பிக்கையுடன் இப்புத்தகத்தை வெளியிடுகிறோம். பொறியாளர்கள், கட்டுநர்கள், கட்டிட காண்ட்ராக்டர்கள், சப்-காண்ட்ராக்டர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் இவர்கள் மட்டுமன்றி தங்களுக்கென சொந்த வீடு கட்டும் பொது மக்களுக்கும் இந்நூல் பெரிதும் பயன்படும். ஒவ்வொரு கட்டுமான அலுவலகங்களில் மட்டுல்லாது கட்டுமானத் துறைக்கென்று பிரத்யேகமான நூல்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் நமது பிராம்ப்ட் பதிப்பகத்திற்கு இந்நூல் நிசச்யம் அதன் மகுடத்தில் பதித்த மணிக்கக்கல்லென திகழும் என நம்புகிறோம்.