உணவு நலமும் உடல் நலமும்

Complimentary Offer

  • Pay via readwhere wallet and get upto 40% extra credits on wallet recharge.
உணவு நலமும் உடல் நலமும்

உணவு நலமும் உடல் நலமும்

  • உடல் நலம் காக்கும் உணவுப்பொருட்களும், உணவுப்பழக்கங்களும்- ஒரு முழு நீள தொகுப்பு
  • Price : 30.00
  • Prompt Publication
  • Language - Tamil
This is an e-magazine. Download App & Read offline on any device.

Preview

உணவுத்துறை என்பது நாட்டின் மிக முக்கியமான துறை. உடலுக்கு ஆரோக்கியமும் நீண்ட ஆயுளையும் கொடுக்கும் இத்துறை கார்ப்ரேட் வணிகர்களால் சூறையாடப்பட்டு வருகிறது. எல்லா உணவுமே பாக்கெட்டில் அடைத்துத்தான் விற்க வேண்டும் என்கிற எழுதப்படாத நியதிகளில் தான் நமது இயற்கையான உணவுத்துறை என்பது நாட்டின் மிக முக்கியமான துறை. உடலுக்கு ஆரோக்கியமும் நீண்ட ஆயுளையும் கொடுக்கும் இத்துறை கார்ப்ரேட் வணிகர்களால் சூறையாடப்பட்டு வருகிறது. எல்லா உணவுமே பாக்கெட்டில் அடைத்துத்தான் விற்க வேண்டும் என்கிற எழுதப்படாத நியதிகளில் தான் நமது இயற்கையான உணவுப்பழக்கம் நம்மை விட்டு வெகுவாக மறைந்து வருகிறது. எது நம் உடலுக்கான உணவு? என்பதை மறந்து, எது நாகரீகமாக உணவு என்பதில் தான் கவனம் செலுத்துகிறோம். அதனால் தான் கம்பு, திணை, ராகி நமது சமையலறைகளிலிருந்து காணாமல் போயின. மேகி, ரெடிமேட் இட்லி மாவு வகையறாக்கள் உள்ளே புகுந்தன.  சிறுதானியம், கீரைகள், கிழங்குகள் போன்றவற்றை எப்போதோ துறந்து விட்டோம்.  பர்கர், பீட்ஸா, மைதா, சர்க்கரை. பதப்படுத்தப்பட்ட இறைச்சி என நோய்களைத் தரவல்ல உணவுப் பொருட்களைத் தேடிப்பிடித்து வாங்குகிறோம். இந்த நூல் நீங்கள் எதை? ஏன்? யாரெல்லாம் உண்ணலாம்? எனச் சொல்லி வழிகாட்டும் நூலாகும். நிஜமான ஆர்கானிக் பொருட்களை எப்படி இனங்காண்பது?, தவறான உணவுப் பழக்கங்கள் எவை? உணவுப் பொருட்கள் பற்றிய நமது தவறான அபிப்ராயங்கள் என்ன? நோய்களைத் தீர்க்கவல்ல உணவுகள் மற்றும் உணவுப்பழக்கங்கள் என்ன? நோய்களைத் தீர்க்கும் உணவுகள் எவை? என நேர்த்தியாக பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும் உடல் நலம் காக்கும் அடிப்படை மருத்துவ குணங்கள் நிறைந்த பீட்ரூட், கற்றாழை, தேன், பச்சை மிளகாய், சோளம், கீரை போன்ற சில உணவுப்பொருட்களின் பலன்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்படுள்ளன. அரிய, அற்புதமான தொகுப்பு இது. படித்துப் பயனுறுங்கள்..