வீட்டுத் தோட்டம்

Complimentary Offer

  • Pay via readwhere wallet and get upto 40% extra credits on wallet recharge.
வீட்டுத் தோட்டம்

வீட்டுத் தோட்டம்

  • வீட்டில் வளர்க்க வேண்டிய தோட்ட வகைகளும் பராமரிக்கும் முறைகளும்
  • Price : 30.00
  • Prompt Publication
  • Language - Tamil
This is an e-magazine. Download App & Read offline on any device.

Preview

வீடு கிடைப்பதே மிகப் பெரிய அவஸ்தையாக இருக்கிற இந்தச் சூழ்நிலையில் வீட்டுத் தோட்டம் என்பது கொஞ்சம் ஓவராக இல்லையா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால், பங்களாவாக இருந்தாலும் சரி, 400 சதுர அடி வாடகை வீடாக இருந்தாலும் சரி, செடிகள் இல்லாத வீடு பூரண அழகைத் தராது. ஏக்கர் கணக்கில் நிலப்பரப்புடைய தோட்டத்தை உங்களால் அமைக்க முடியாது என்றாலும், குறைந்தபட்சம் வாசலில் இரு புந்தொட்டிகளையாவது வளர்கக் நாம் முன் வர வேண்டும். உலகிலேயே தனக்கென எந்த நன்மையும் செய்து கொள்ளாமல் பிறருக்காகவே வளர்ந்து, வாழ்ந்து, மடியும் ஒரே உயிரினம் தாவரம்தான். அதனை வளர்ப்பதற்கு ஏன் நமக்கு இத்தனை அலட்சியம்? சோம்பல்? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.  நம் சமூகத்தில் தோட்டக்கலை பற்றிய விழிபபுணர்வை ஏற்படுத்த இந்நூல் நல்ல முயற்சியாக இருக்கும். ஏற்கனவே வீடுகளில் சிறிய, பெரிய அளவில் தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு இந்நூல் வழிகாட்டியாகத் திகழும். இதுவரை வீட்டில் தோட்டம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்கள் கூட இந்நூலைப் படித்தால் மண்வெட்டியையும், விதைகளையும் எடுத்துக் கொண்டு தோட்டம் அமைக்கப் புறப்பட்டு விடுவார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியும். கட்டுமானத்துறையில் உள்ள பல்வேறு பிரிவுகளில் மகத்தான் படைப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வரும் நமது பதிப்பகம் தற்போது வெளியிட்டு இருக்கும் வீட்டுத் தோட்டம் என்ற நூல் எல்லாத் தரப்பினரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும் என்றும் நம்புகிறோம்.