புது வீடு கட்டலாமா?
புது வீடு கட்டலாமா?

புது வீடு கட்டலாமா?

  • கனவு வீட்டைக் கட்டுவோருக்கான முழு முதற் வழிகாட்டி
  • Price : 60.00
  • Prompt Publication
  • Language - Tamil
This is an e-magazine. Download App & Read offline on any device.

Preview

பொதுமக்கள் பலபேர் மனையை வாங்குவது, பத்திரப்பதிவு செய்வது, அஸ்திவாரப் பணிகளை மேற்கொள்வது, வீடு போடுவது குறித்த எவ்வித முன் அனுபவமும் இல்லாதவராக உள்ளனர். மேலும் மின் இணைப்புப் பணிகள், குடிநீர், கழிவு நீர் இணைப்பு முறைகள் குறித்தும் ஏதும் அறியாதவராகவே உள்ளனர். புதிய வீடு கட்டு முன்னர், எப்படி ஆரம்பிப்பது? யாரை நாடி கட்டுவது? ஒப்பந்தக்காரர் (கான்ட்ராக்டர்), அமர்த்த வேண்டுமா? அவர் சரியான தரத்துடன் கட்டுவாரா? லாபம் ஒன்றே குறிக்கோளாயிருப்பாரா? இப்படி பலப்பல சந்தேகங்களும், பிரச்சனைகளும் தோன்றுவது இயற்கையே. அவற்றையெல்லாம் களையும் நோக்கில் விரிவாகவும், ஆழமாகவும் எழுதப்பட்டதுதான் இந்நூல். புது வீடு கட்டலாமா என்கிற இந்நூலின் ஆசிரியர் திரு. சி.எச் கோபிநாத ராவ் அவர்கள் மூத்த பொறியாளர் ஆவார். கட்டடத்துறைத் தொடர்பான 45க்கும் மேற்பட்ட ஆங்கில நூல்களை எழுதியிருக்கும் இவர் முத்தான 5 கட்டட நூல்களை அழகு தமிழிலும் எழுதியிருக்கிறார்.  இந்நூலிலன் மனை வாங்கவும், வீடு கட்டவும், திட்டமிடல் தொடங்கி வீடு கட்ட எஸ்டிமேஷன் போடுவது, மனையை சீர்ப்படுத்தி தயார்படுத்துவது, அஸ்திவாரப் பணிகளை ஆய்வு செய்வது, சிமெண்ட், மணல், ஜல்லி, கான்கிரீட், சுவர் வேலை, ஜன்னல், கதவு, கூரை, வார்ணம் தொடர்பான பணிகளை மேற்கொள்வது என வீடு கட்டுதலின் பல்வேறு அமசங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் குடிநீர் மற்றும் கழிவுநீர் ஏற்பாடுகள், மின்சார இணைப்புகளும், அமைப்புகளும் குறித்த தகவல்கள் இதில் எளிமையாகச் சொல்லப்பட்டுள்ளன.